நயன்தாரா தற்போது நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ‘நிழல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.