சென்னை:

இந்தியா டுடே டி.வியின் தென்னக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியை இந்தியா டுடே டி.வி. நேரடியாக ஒளிபரப்பு செய்தது.  அப்போது இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் ராகுல் கன்வால், சசிகலாவிடம், “இந்நிகழ்ச்சி குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

தொலைக்காட்சி பேட்டியில் இதுதான் சசிகலாவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி.

 

அதற்கு சசிகலா அளித்த தமிழில் பதில் அளித்தார். இதிலொன்றும் தவறில்லை. ஆனால் அவர் சொன்ன விசயம்தான் அதிரவைத்துவிட்டது.

அவர் அளித்த பதில் அப்படியே..

“இந்தியா டுடே கான்கிலேவ்.. வந்து முதல் முறையாக இங்க தமிழ்நாட்டுல செஞ்சிருக்கீங்க..  பிராந்திய மொழிகளில் வந்து இண்டியா டுடே எடுத்துகிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும்…….. வாசகர்களை அந்தந்த… இப்ப தமிழ்நாடு என்றால் தமிழ்நாட்டு மொழியிலேயே உங்களுடைய பத்திரிகை வருவது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இந்தியா டுடே தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு  இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. இந்த விவரம் தெரியாமல், அந்த இதழின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “இந்தியா டுடே பத்திரிகை தமிழில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி” என்று சசிகலா பேசியிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சசிகலா பேசிய அந்த வீடியோ: