பெங்களூரு,

சிறையில் அடைக்கப்பட்ருந்த சசிகலா, சிறை வாழ்க்கையை சொகுசாக கழித்துள்ள பரபரப்பு தகவல்களை டிஐஜி ரூபா வெளியிட்டு உள்ளார்.

அதில், சிறையில் இருந்து சிறை அதிகாரிகள் வாகனம் மூலம், சிறையில் இருந்து வெளியேறும் சசிகலா பெங்களூர் சிட்டியில் ஷாப்பிங் சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு வசதியாக  டிடிவி தினகரன் பெங்களூரில் தனி வீடு ஏற்பாடு செய்தது தெரிய வந்துள்ளது என்றும் ரூபா கூறி உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை  பிஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மூலம் டிடிவி தினகரன்  செய்துள்ளதும், பெங்களூரு  பன்னர்காடா சாலையில்  30×40 சதுர அடி உள்ள வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது தனது விசாரணையில் தெரிய வந்துள்ளதும்,

இந்த வீட்டுக்கு அடிக்க  சசிகலா அன் கோவினர் வந்து ஓய்வு எடுத்து செல்வதும், அங்கிருந்து  எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஷோரூம்களுக்கு பர்சேஸ் சென்று வந்துள்ளதும் தெரிய வந்தது. இதற்கு வசதியாக இரண்டு பினாமி கார்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆனால், இவர்கள் ஷாப்பிங் செல்லும்போது என் கண்ணில் மாட்டியிருந்தால், விளைவுகள் கடுமையாக இருந்திருக்கும் என்றும், இதுகுறித்து ஒருசில சிறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த தற்கு, அவர்கள் உயர் அதிகாரிகள் முலம் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஏற்பாடு செய்துவந்த, பிஎஸ்எப் எஸ்ஐ கஜராஜின் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்த முன்னாள் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணா குமார் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை “என்றும் ரூபா கூறி உள்ளார்.