பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய ராதிகா சரத்குமாரின் Radaan Media woks நிறுவனம் தற்போது OTT தளத்தில் “இரை” எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய பயணத்தை துவக்கியுள்ளது.

இந்த இணைய தொடரில் ராதிகாவின் கணவர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த வெப் தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சசி கலை இயக்கம் செய்கிறார். சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளை கவனிக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

“தூங்காவனம், கடாரம் கொண்டான்” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த இணையதொடரினை இயக்குகிறார்.