சென்னை: மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா2021 தடுக்க வேண்டும் என வலியுறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கார்த்தி மனு கொடுத்துள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ”ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் இடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான என குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தலைமையில்  நடிகை ரோகிணி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர் ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா2021 தடுக்க வேண்டும்  என வலியுறுத்து முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை. இதற்காக, முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம் என கூறினார்.  ‘சென்சார்’ செய்த படத்தை, எந்த தருணத்திலும், அரசு தடை செய்ய முடியும் என்ற அம்சத்தை, ஒளிப்பதிவு சட்ட திருத்தத்தில் சேர்க்கின்றனர். இது, ஆபத்தானது. இனிமேல் எடுக்க போகும் படங்கள் மட்டும் கிடையாது; ஏற்கனவே எடுத்த படங்களுக்கும், இது ஆபத்தாக இருக்கும்.

இந்த சட்டத்தால், ஒரு படத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்ய முடியும், இது கருத்து சுதந்திரத்தை மட்டுமின்றி, வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயமாக உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து தடுக்கும் வகையில், தமிழக அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை. அதற்காகவே,  முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இது, எங்களது உரிமைக்கான குரல். இதோடு நிற்காது; பெரிதாக எடுத்து செல்வோம். எல்லா துறைகளும் சேர்ந்து, எங்களது உரிமைக்காக நிச்சயம் போராடுவோம்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.