சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சந்தானம்.

ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்தை ஆர்.கண்ணனோடு சேர்ந்து எம்ஆர்கேபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாகிறது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.