லண்டன்: 
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்  ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ்,   உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான  விளங்கி வருகிறார்.  இதுவரை 71 டெஸ்ட் போட்டி, 101 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் பங்கேற்று இவர், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடி 8000 ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணிக்குக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 30 வயதை எட்டியுள்ள பென் ஸ்டோக்ஸ்,  திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து,  ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மன நலத்திற்கு முன்னுரிமை அளித்து, ஓய்வு முடிவினை எடுத்துள்ளதால், அவரது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்  ஒய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா, இந்த அறிவிப்பு, பென் மற்றும் அவரது குடும்பத்திற்குக் கடினமான காலமாக இருக்கும். இதுபோன்று ஓய்வு அறிவிப்பு முடிவை எடுப்பது எளிதான ஒன்று அல்ல, ஆனாலும், உங்கள் முடிவு, உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.