டோக்கியோ: மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீன வீராங்கனையுடன் மோதிய நிலையில் தோல்வியடைந்துள்ளார்.

பாட்மிண்டன் அரையிறுதியில் இன்று மதியம் நடைபெற்றது. உலகின் நம்பர் 2 வீராங்கனையான சீன தைபேவைச் சேர்ந்த  தாய் சு யிங்கை சிந்து திர்கொண்டார் சிந்து.  முதல் கேமில் ஆரம்பத்தில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும், சீன வீராங்கனையின் ஆட்டத்துக்கு சிந்துவால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால், 21-18 என  சீன வீராங்கனை முதல் கேமைக் கைப்பற்றினார்.

2வது சுற்றில் சிந்து ஆக்ரோசமாய் ஆடுவார் என எதிர்பார்த்தால், தைபேவை  வீராங்கனை தாய் அசத்தலாக ஆடி, சிந்துவை பாயிண்ட் முடியாத நிலைக்கு ஆளாக்கினார்.  இதனால் 2-வது கேமை 21-12 என வென்றார். இதையடுத்து தைபேவை வீராங்கனை தாய்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். சிந்து வெளியேறினார்.

இதையடுத்து சிந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையுடன் மோதவுள்ளார். அதில் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.