‘எங்களை மன்னித்து விடுங்கள்’: ஒலிம்பிக் தடகளத்தில் தோல்வியை தழுவிய தமிழக வீரர்கள்…..

Must read

டோக்கியோ: ஒலிம்பிக் தடகளத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தமிழக வீரர்கள், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை  23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க26 இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகிய 3 தடகள வீராங்கனைகள் மற்றும் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகிய 2 தடகள வீரர்கள் என மொத்தம் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு   தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை தமிழகஅரசால் வழங்கப்பட்டது.
மேலும், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ. 2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 30ந்தேதி) ஒலிம்பிக்கில் தடகள போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணி 4*400 மீ பிரிவுக்கான போட்டியில் தோல்வியடைந்து.
அதுபோல, 4*400  கலப்பு பிரிவு போட்டியில்  இந்தியாவின் சார்பில் முகமது அனாஸ், தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் 4*400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவு தடகள போட்டியில் இந்திய அணி தகுதிப்பெற்றது இதுவே முதல் முறை. இதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால்,   இந்திய அணி 8வது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்து. இதனால்  இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்தனர். இதன் காரணமாக தடகளப் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாட்டைச் வீரர், வீராங்கனைகள் ‘எங்களால் முடிந்த அளவு ஓடினோம் ஆனால் வெற்றி பெற முடியவில்லை எங்களை மன்னித்து விடுங்கள்’ என மன்னிப்பு கோரியுள்ளனர்.

More articles

Latest article