சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதாவின் பூதஉடல் பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதற்காக, சந்தனப்பெட்டி தற்போது  செய்யப்பட்டு இறுதி நிலையை அடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு ஏதுவாக  வைக்கப்படுவதற்கு சந்தனக்கட்டையால் ஆன பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.