சென்னை
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அண்டை மாநில முதல்வர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2jeya
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி  அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், முன்னாள் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரான ரங்கசாமியும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மறைந்த ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.