சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – இரண்டாம் பகுதி

நேற்று சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம்.  இன்று மேலும் தகவல்களை காண்போம்

 16.  கிருபானந்த வாரியார் ஐயா தமக்குக் கிடைத்த நன்கொடை மூலம்  கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

  1. விமானம்தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை3 கிலோ 288 கிராம். இதன் மொத்த  மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.
  1. ரூபாய்20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
  1. அம்மனைமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
  1. பக்தர்கள்அம்பாளை வேண்டி  விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்குப் பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப்  பட்டினி விரதம்’ எனப்படுகிறது.
  1. மாசிமாதக் கடைசி ஞாயிறன்று அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி  கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நிவேதிக்கப்படுகின்றன.
  1. அதாவதுசாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன.
  1. சித்திரைமாதத்தின் கத்தரி  வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களைக் குளிர  வைக்கும் தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே, பக்தர்கள் பூமாரி  பொழிந்து குளிரச் செய்கிறார்கள்.
  1. சமயபுரத்தாள்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு & மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு & வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.
  1. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
  1. இரண்டாம்பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
  1. சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.
  1. அம்பாளின்கருவறையைச் சுற்றி எப்போதும் ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள், அன்னை குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
  1. பார்வைஇழந்த சிவந்தி லிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.
  1. பெருமாளிடமும்,ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!
  1. கொள்ளிடம்தான் அண்ணன் ஸ்ரீ ரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது.

தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.

  1. அன்றுஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள்,

மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.  இதைத் தீர்த்தவாரி விழா என்பர்.

  1. சித்திரைத்திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.
  1. இங்குஉயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.
  1. நமதுகுறைகளைக் காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்பமரத்தில் கட்டி பிரார்த்தித்தால் உடனே குறைகள் தீருகிறது.