டில்லி

ந்தியாவில் நேற்று 27,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,30,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,077 அதிகரித்து மொத்தம் 3,35,30,077 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 4,45,801 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 34,145 பேர் குணமாகி  இதுவரை 3,27,76,207 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,95,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,131 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,27,629 ஆகி உள்ளது  நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,616 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,021 பேர் குணமடைந்து மொத்தம் 63,44,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,712 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 15,768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,39,926 ஆகி உள்ளது.  இதில் நேற்று 214 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,897 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,367 பேர் குணமடைந்து மொத்தம் 43,54,264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,61,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 818 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,69,361 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,414 பேர் குணமடைந்து மொத்தம் 29,17,944 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,48,688 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,379 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,651 பேர் குணமடைந்து மொத்தம் 25,96,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,179 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,40,708 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,089 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,651 பேர் குணமடைந்து மொத்தம் 20,12,714 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.