[embedyt] https://www.youtube.com/watch?v=D4x6CeRV5Bc[/embedyt]

BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் , சுனிதா டாடி தயாரிபில் , சமந்தா நடித்துள்ள தெலுங்கு படம் “ஓ பேபி” “ஓ பேபி” திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ ‘மிஸ் கிராணி’ படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி’ படத்திலிருந்து ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

70 வயதான பாட்டி லட்சுமி 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகளும், பாசப்போராட்டங்களும் இந்த படத்தின் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.