மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் மகாநதி என்கிற பெயரில் படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தில் நடிகை சாவித்திரி வேடத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நடிக்கவில்லை.
இது பற்றி படக்குழு கூறியதில்,
“நடிகை சமந்தா இப்படத்தில் ஓப்பந்தமாகியுள்ளார். ஆனால் நடிகை சாவித்திரியின் வேடத்தில் அவர் நடிக்கவில்லை. வேறு ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். நடிகை சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகையை இன்னும் தேர்வு செய்யவில்லை.
நடிகை சாவித்திரி வேடத்தில் நடிப்பதற்கு நித்யா மேனன், வித்யா பாலன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிப்புகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்” என கூறியுள்ளது.