ரிலீஸுக்கு முன்பே வெளியான பைரவா பாடலகள்: லகரி நிறுவனம் விளக்கம்

Must read

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜ்ய நடித்திருக்கும் படம் ‘பைரவா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை லகரி ம்யூசிக் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் பாடல்கள் முன்பே வெளியிடப்பட்டது. இது குறித்து லகரி நிறுவனம்,
“மிகவும் வருந்துகிறோம். தகவல் தொடர்பு கோளாறால் ஐ-டியூன்ஸ் இணையத்தில் ‘பைரவா’ பாடல்கள் வெளியாகிவிட்டது. ஆனால், உடனடியாக தெரியப்படுத்தி மாற்றினோம்.
ஐ-டியூன்ஸ் அலுவலகம் சில வாரங்கள் இயங்காததால் முந்தைய இசை வெளியீட்டு தேதிக்கு வெளியிட்டு விட்டார்கள். நாங்கள் அனுப்பிய புதிய தேதி அடங்கிய இ-மெயிலை அவர்கள் பார்க்கவில்லை. விரைவில் அப்பாடல்களை இணையத்தில் வெளியிடுவோம்” என்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

More articles

Latest article