மலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் ‘ஒப்பம்’. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குனர் பிரியதர்ஷன் முன்னரே அறிவித்திருந்தார். தற்போது இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக பிரியதர்ஷன் அறிவித்திருக்கிறார்.
தற்போது அக்சய் குமார் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இப்படம் முடிந்தபின் ஒப்பம் படத்தின் ரீமேக்கிற்கான பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.