நாக சைதன்யா அமீர்கானுக்கு அளித்த விருந்து ; மிஸ் ஆன சமந்தா….!

Must read

சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவின் உறவு குறித்த ஊகங்கள் சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன.

இந்த வதந்திகளைப் பற்றி இருவரிடமும் பல முறை கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகரும், நாக சைதன்யாவின் லால் சிங் சத்தாவில் அவருடன் நடிக்கும் நடிகருமான அமீர்கான் சமீபத்தில் படத்தின் விளம்பர பணிகளுக்காக ஐதராபாத் சென்றார்.

நாக சைதன்யாவும் அவரது தந்தை நாகார்ஜுனாவும், அமீர் கானுக்கு இரவு விருந்து அளித்தனர். இந்த இரவு உணவு விருந்தின் பல படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. இருப்பினும், இந்த விருந்தில் சமந்தா (Samantha) இல்லாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

லால் சிங் சட்டா, 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இதில் கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

More articles

Latest article