30 வருடங்களுக்கு பின் ’கணம்’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அமலா….!

Must read

தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. சுமார் 30 வருடங்களுக்கு பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டி ராஜேந்தர் இயக்கிய ’மைதிலி என்னை காதலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார் அமலா.

இந்நிலையில் தற்போது சுமார் 30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் அமலா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஷர்வானந்த் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ’கணம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

 

More articles

Latest article