’ஷகுந்தலம்’ புராணத் திரைப்படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தம்….!

Must read

கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ’அபிஜன ஷகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

முன்னதாக இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன. தற்போது சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இயற்கைக்குப் பிரியமான, மிக அழகான, மென்மையான ஷகுந்தலாவாக சமந்தா’ என்று இந்த மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது துஷ்யந்த மகாராஜாவுக்கும், விஸ்வமித்ரர் – மேனகையின் மகளான ஷகுந்தலாவுக்கும் இடையே இருந்த காதலைச் சொல்லும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

More articles

Latest article