நடனபெண் ரவிக்கையில் பணத்தை சொருகி ரசித்த சமாஜ்வாதி எம்எல்ஏ! (வீடியோ)

Must read

 
லக்னோ,
உ..பியில் நடைபெற்ற கட்சி தொண்டர் திருமண விழாவில் கலந்துகொண்ட சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர், அங்கு நடைபெற்ற நடன பெண்களின் குத்தாட்டத்தை வெகுவாக ரசித்தார்.
நடன பெண்களின் ரவிக்கையில் பணத்தை சொருகியும், அவர்களுக்கு பணத்தை வாரி இறைத்தும், நடன பெண்களின் அருகில் யாரையும் நெருங்க விடாமல் தன் அருகே ஆட வைத்து  உற்சாகமாக நடனத்தை ரசித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
up-mla
தற்போது வடமாநிலங்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நடன பெண்களின் குத்தாட்டம் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சி மட்டுமல்லாமல் கோயில் நிகழ்ச்சி, பொதுவான நிகழ்ச்சி அனைத்திலும் நடனப்பெண்களின் குத்தாட்டம் நடைபெற்று வருகிறது.
அதுபோல  உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற  திருமண விழாவில் பங்கேற்ற சமாஜ்வாடி எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அங்கு குத்தாட்டம் ஆடிய  பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களை அருகே ஆட வைத்து ரசித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஜகத்ராம் பஸ்வான், திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது, அங்கு சில பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அந்த பெண்களுக்கு பணத்தை வாரி கொடுத்தார்.
நடனமாடும் பெண்ணின் ரவிக்கையில் பணத்தை சொருகினார். இதை பார்த்ததும், அங்கிருந்த சிலர், அவரை தட்டிக் கேட்கமுடியாமல், தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் சமாஜ்வாதி கட்சி சட்ட மன்ற உறுப்பினரின் இந்த செயல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதை பார்த்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவு செய்தி தொடர்பாளர் அருண் பிரகாஷ் சிங் கூறுகையில், “சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகம் இதுதான். இந்த வீடியோ மூலமாக மக்களுக்கு இது தெரியவந்துள்ளது” என்றார்.
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/10/Samajwadi-Party-MLA-Jagram-Paswan-put-money-inside-female-dancers-clothes.mp4[/KGVID]

More articles

Latest article