நீங்கள் வெகுகாலம் ஒரே ஏடிஎம் பாஸ்வேர்டை பயன்படுத்திவந்தால் உடனடியாக அதை மாற்றுங்கள்
இந்தியாவில் உள்ள வங்கிகள் கிட்டத்தட்ட 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றவோ அல்லது அதன் பயனாளர்களை ஏடிஎம் பாஸ்வேர்டுகளை மாற்றச்சொல்லி கோரவோ வேண்டிய சூழலில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் இருந்து முறைகேடான சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி பலருடைய பணம் வங்கியிலிருந்து திருடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் இதைத் தடுக்கும் நடவடிக்கையில் வங்கிகள் இறங்கியுள்ளன.

deb_card

இதில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் ஆகும் மேலும் 6 லட்சம் கார்டுகள் ரூபே கார்டுகள் ஆகும். இந்தக் கார்டுகள் முறையே ஹெ.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, யெஸ் பேங்க் மற்றும் ஆக்ஸிஸ் பேங்குகள் வழியாக விநியோகிக்கப்பட்டவை ஆகும்.
ஹிடாச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஏடிஎம்கள், பணம் செலுத்தும் டெர்மினல்கள் ஆகியவற்றில் சில திடுட்டுத்தனமாக சாஃப்ட்வேர்களை புகுத்தி பணம் திருடப்படுகிறது.
இதுபற்றி ஹெச்.டி.எஃப்.சி வங்கி தரப்பில் வெளியிடப்பட்டசெய்தியில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றும்படியும், பணம் எடுக்க ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்தும்படி அறிவுறுத்திவருவதாகவும் கூறியிருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியும் தனது வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் இரகசிய குறியீட்டு எண்ணை அடிக்கடி மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வங்கி தனது கிட்டதட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு மாற்றித்தரவுள்ளது. இதற்காக அவ்வங்கி 6 லட்சம் டெபிட் கார்டுகளை முடக்கி வைத்துள்ளது.