டில்லி,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவரை கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த சகமாணவர்கள் நேற்று போராட்டத்தில் இறங்கினர்.
இதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் உட்பட உயரதிகாரிகள் சிலரை கல்லூரி வளாகத்தினுள் சிறைபிடித்து வைத்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 15ந் தேதி காலை 11 மணி முதல் மாணவர் நஜீப் என்பவரை இவரைக் காணவில்லை. இவர் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி – மாந்தவி விடுதியில் தங்கியிருந்தார்.
அங்கு அவருக்கும் மற்றொரு மாணவ பிரிவான ஏபிவிபி மாணவ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நஜீப் காணாமல் போனார்.
இதன் நஜீப் காணாமல் போனதற்கு ஏபிவிபி மாணவ அமைப்புதான் காரணம் என உடன் படிக்கும் சக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜேஎன்யு மாணவர்கள் கூறுகின்றனர்.
நேற்று மதியம் 2.30 மணி முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நுழைவு வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணை வேந்தர்  பதிவு செய்த ட்வீட்களில், “பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் நாங்கள் பேசியிருக்கிறோம்.
காணாமல் போன மாணவர் நஜீபை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதில் எந்த சுணக்கமும் இல்லை என பலமுறை எடுத்துரைத்துவிட்டோம்.
ஆனாலும், நாங்கள் இன்னமும் அடைபட்டிருக்கிறோம். மணி அதிகாலை 2 மணியாகிவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போன  மாணவர் நஜீப் மாயமானது தொடர்பாக புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் மோஹித் பாண்டே கூறும்போது, “நிர்வாகத்துடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துவிட்டன.
6 நாட்களாக பொறுப்பான எந்த பதிலையும் துணை வேந்தர் தரவில்லை.
நாங்கள் கோருவதெல்லாம், நஜீப் மாயமானது தொடர்பாக நிர்வாகத் தரப்பில் எழுத்துபூர்வமான புகாரை போலீஸில் கொடுக்க வேண்டும்.
விடுதிகளில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே.
அவர் மேலும் கூறும்போது, நஜீப் காணாமல் போன நாள் முதல் அவரது தாயார் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துக்கு முன் உதவி கோரி காத்துக் கிடக்கிறார்.
ஆனால், இதுவரை அவரை ஒருமுறை மட்டுமே பல்கலைக்கழக் நிர்வாகம் சந்தித்துள்ளது என்றார்.
ஜே.என்.யு. பல்கலைக்கழக வளாகம் இரண்டாவது முறையாக மீண்டும்  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.