சல்மான் கானின் ‘’ ராதே’’ : ஏழு  மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பம்..
சல்மான் கான் ஹீரோவாக நடிக்க பிரபுதேவா இயக்கும் ‘’ RADHE’’ என்ற இந்தி சினிமாவின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கியது.
கொரோனா இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்திருந்தால், கடந்த மே மாதமே ‘ராதே’’ வெளிவந்திருக்கும்.
ஊரடங்கால் முடங்கிப்போன படங்களில் ‘ராதே’’வும் ஒன்று.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ’ராதே’’ படத்தின் ஷுட்டிங் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள கர்ஷத் என்ற இடத்தில் உள்ள ‘என்.டி.ஸ்டூடியோவில் நாளை ( வெள்ளிக்கிழமை) மீண்டும் ஆரம்பமாகிறது.
தொடர்ச்சியாக 15 நாள் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
இதன் பின், மும்பையில் உள்ள மெக்பூப் ஸ்டூடியோவில் விடுபட்ட காட்சிகள் (பேட்ஷ் அப்) எடுக்கப்படும்.
மும்பையில் இருந்து என்.டி. ஸ்டூடியோ தொலைதூரம் என்பதால், ஸ்டூடியோ பக்கத்தில் உள்ள ஓட்டலில் தொழில் நுட்ப கலைஞர்கள் தங்குவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு வகுத்துள்ள விதிமுறைகள் தவிர, படப்பிடிப்பு குழுவும், சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
 ஷுட்டிங் நடக்கும் அரங்குக்குப் பக்கத்தில் ஆம்புலன்சுடன், டாக்டர் ஒருவரும் நிறுத்தப்படுகிறார்.
ஏற்கனவே இதில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
 யாருக்கும் ‘பாசிட்டிவ்’ இல்லை.
நம்ம ஊர் பரத் மற்றும் ஜாக்கிஷெராப், ரந்தீப் ஹோடா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம், ’திரில்லர் ஆக்ஷன்’’ படமாகும்.
7 மாதங்களுக்குப் பிறகு சல்மான் கான், இந்த படத்துக்கு நாளை அரிதாரம் பூசப்போகிறார்.
-பா.பாரதி.