சினிமா விமர்சனம் : சக்க போடு போடு ராஜா

Must read

ரு சீன்ல சினிமா சூட்டிங் நடந்திட்டிருக்கும். ஹீரோ பேச வேண்டிய டயலாக் என்னன்னா “ டேய் உன் தங்கச்சிய தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணி வெச்சது நான் தாண்டா உன்னால என்னடா பண்ண முடியும் தெகிரியம் இருந்தா போன் பண்றத விட்டுட்டு நேர்ல வாடா பாப்போம்“ இது தான் டயலாக் .  ’சிவாஜி’ல வர்ற ரஜினி மாதிரி டோப்பா எல்லாம் சூப்பரா வச்சிக்கிட்டு ரெடியா நிக்குறாரு ஹீரோ. அப்போ பார்த்து, உண்மையாலுமே கடத்தப்பட்ட ஒரு தங்கச்சியின் அண்ணனிடமிருந்து போன் வருகிறது. அந்த அண்ணனோ மிகப் பெரிய தாதா. சுச்சுவேஷன் புரியுதுங்ளா.

”டேய் நீ யார்னு தெரியுமா என்று அண்ணன் கத்த, அதுக்கு ஹீரோ, “ டேய் நீ ரஜினின்னா நான் ரஜினி.. நீ கமலுன்னா நான் கமலு.. நீ விஜய்னா நா விஜய்… நீ அஜித்துன்னா நா… அஜித்துறா…. என்று பயங்கரமாக கத்துகிறார். ”நீ யார்கிட்ட பேசறன்னு புரியுதா” ன்னு தாதா பதிலுக்கு கத்த, ”யாருக்கிட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்கு” என்று ஹீரோவும் கத்த, ரெண்டு பேரும் மாறி மாறி சத்தம் போட, ”ஒழுங்கா நீ இருக்கும் இடம் சொல்றா” என்கிறான் தாதா அண்ணா. “ எல்லா சூட்டிங்கும் நடக்கும் அதே பின்னி மில்லுல தாண்டா இருக்கேன்.. முடிஞ்சா வாடா” என ஹீரோ சவால் விட,  அந்த தாதா அண்ணன் வந்து, அந்த ஹீரோவ போட்டு பொரட்டி பொரட்டி எடுக்கிறான். ரவுடிகளை அடித்து பறக்கவிட வேண்டிய ஹீரோவோ செம்மயாக அடி வாங்குகிறார்.  அந்த ஹீரோ யாருன்றிங்க.. நம்ம பவர் ஸ்டார். ஹஹ்….ஹஹ்…ஹஹ்…..ஹா…

அப்புறம் இன்னொரு சீன்ல,

தங்கச்சிய கடத்திட்டுப் போன டேக்சியோட டிரைவர் பெங்களூருல இருக்கான்னு தெரிஞ்சி, தாதா அண்ணன் அங்கேயும் தொரத்தி போறானா.. அப்போ பாத்து அவனோட கார் ரிப்பேர் ஆகிறதா.. அத ரிப்பேர் பண்ண நாலு நாள் ஆவும்ன்றாங்களா.. ஒடனே தாதா ஒரு டேக்சிய வாடகைக்கு எடுத்துக்கிறார். அந்த டேக்சி டிரைவர் யாருன்னா, தாதாவோட தங்கச்சிய கடத்திட்டுப் போன அதே டேக்சியோட டிரைவர்தான்.  அந்த டிரைவர தேடினுதான் தாதா பெங்களுரே வந்துருக்காரு… ஆனா, பாருங்க அதே டிரைவரோட டேக்சியவே வாடகைக்கு வெச்சின்னு டிரைவரைத் தேடி பெங்களூறு முழுக்க சுத்து சுத்துன்னு சுத்துறாங்க.

”டேய் நீ எங்கடா இருக்கேன்னு” மறுபடியும் தாதா கத்த, நான் பெங்களூர்ல இருக்கேன்னு டேக்சி டிரைவர் சொல்ல, ”பெங்களூர்ல எங்கடா”ன்னு இவரு கேக்க, ”லால் பாக்குடா என் சும்மிங் பூ… ”ன்னு அவுரு சொல்ல, ”நானும் லால் பாக்குதான்”னு இவரு கத்த… எங்கடா.. எங்கடா வாடா.. வாடா..ன்னு ரெண்டு பெரும் கத்தி கடைசில பாத்தா ரெண்டு பேரும் ஒரே காந்தி செலை பின்னாடி இருந்து வந்து……ஹய்யோ ஹய்யோ… அந்த டேக்சி டிரைவர் யாருன்றிங்க நம்ம விவேக்கு…. ஹஹ்…ஹஹ்..ஹஹ்…….ஹா

இன்னொரு சீன்ல,

தாதாவோட சின்ன தங்கச்சிய ஹீரோ லவ் பண்றாரு. ( முன்னாடி சொன்ன ஹீரோ இல்ல.. இவுரு இந்த படத்தோட ஹீரோ ) இது தெரிஞ்ச தாதா, ஹீரோவ அடிச்சி சாவடிக்க ஒரு பயங்கரமான ’கேங்’கை அனுப்புகிறார். அந்த கேங்கோட லீடர், ஹீரோவ பாத்து மெரட்ட போனா… விடுவாரா ஹீரோ.. அந்த கேங் லீடர மெர்சலாக்கி அனுப்பி வெக்கிறாரு. அந்த கேங் லீடர் அப்பிடியே ஜெர்க் ஆகி, போனை எடுத்து “தேனு… மாமென் ஒரு சின்ன ஃபைட் சீக்வென்சுல இருக்கேண்டா செல்லம்.. இப்போ வந்துடறேன் “ என்று உதார் விட்டு ஓடி வந்து விடுகிறார். செம்ம சிரிப்பு… அந்த கேங் லீடர் யாருன்றிங்க நம்ம ரோபோ சங்கி. ஹஹ்..ஹஹ்..ஹஹ்….ஹா….

இன்னொரு சீன்ல

பெரிய தங்கச்சி மாதிரியே சின்ன தங்கச்சியும் ஒருத்தன.. அதாவது, ஹீரோவ ( மறுபடியும் சொல்றேன்.. இவுரு இந்த படத்தோட ஹீரோ ) காதலிக்கிறான்னு தெரிஞ்சி டென்சனாகிறார். தாதா அண்ணா. இப்போ இருக்கிற வீட்டுல இருந்தா அக்கா ஓடுன மாதிரி தங்கச்சியும் ஓடிப்போயிடுவா அதனால நல்ல வாஸ்து இருக்கும் வீடா பாத்து குடி போனா உனக்கு நல்லதுன்னு சொல்றாரு ஒரு ஜோசி.. அப்பிடி ஒரு நல்ல வீட்ட நானே காட்டுறேன்னு சொல்லி அவங்கள இன்னொரு நல்ல வாஸ்தா இருக்குற வீட்டுக்கே குடியும் வர வெச்சிடறாரு அந்த ஜோசி. அந்த வீடு யாருதுன்னா ஹீரோவோட வீடே. இதெப்டி இருக்கு… அந்த ஜோசி யாருன்னா நம்ம மயில்சாமி.. ஹஹ்..ஹஹ்..ஹ.ஹ்….ஹா….

 

இன்னொரு சீன்ல,

அந்த டேக்சி டிரைவர் இருக்காரில்லையா. விவேக்கு. அவுரு தப்பிச்சா போதும்னு, தாதாகிட்ட ஹீரோவோட அப்பா இருக்கிற எடத்த சொல்லிடறாரு. தாதா வந்து ஹீரோவோட அப்பாவ ( நல்லா புரிஞ்சிக்குங்க இதுவும் இந்த படத்தோட ஹீரோதான் ) புடிச்சி செம சாத்து சாத்துறாரு. அப்பாவோ அவன் யாருன்னே எனக்கு தெரியாதுன்னு சத்தியம் பண்ணிடறாரு. தாதா ரெண்டு பேரையும் போட்டு அடி அடின்னு அடிக்கிறாரு. ஒரு கட்டத்துல அப்பாவும் விவேக்கும் அங்கிருந்து எஸ்கேப்பாகிடறாங்க. நடு ராத்திரில தப்பிச்சி எங்க போறதுன்னு முழிக்க  ஹீரோவோட அப்பா, தன்னோட வீட்டுக்குப் போக அங்க தான் ஏற்கனவே அந்த தாதாவோட டீம் குடி வந்துட்டாங்ளே.. ஹீரோவோட அப்பா மறுபடியும் தாதாகிட்ட மாட்டி செம்ம அடி வாங்குகிறார்.                                                  ஹீரோவோட அப்பா யாருன்றிங்க.. நம்ம விடிவி கணேசு… டே….த்தம்பி….   ஹஹ்..ஹஹ்..ஹஹ்…ஹா….

இன்னொரு சீன்ல,

இப்போ தாதாவோட தங்கச்சிய கடத்திட்டுப் போனது யாருன்னு தெரிஞ்சிக்க தாதாவுக்கு ஒரு ஐடியா குடுக்குறாரு விவேக்கு. அதாவது, விடிவி கணேசுக்கு ஒரு பொண்டாட்டி இருக்காங்க.. அவங்கள கடத்திட்டு வந்து அடிச்சி கேட்டா உண்மைய சொல்லிடுவாங்கன்னு. தாதாவும் விடிவியோட பொண்டாட்டிய கடத்திட்டு வந்துடுறாரு. ஆனா பாருங்க, அவங்க கடத்திட்டு வந்தது விடிவி யோட பொண்டாட்டிய இல்ல. விவேக்கோட பொண்டாட்டிய. விவேக்கோட பொண்டாட்டி யாருன்னா… பேர் தெரில… ஆனா.. செ.ஐ. ஹஹ்..ஹஹ்…ஹஹ்..ஹா…..

அப்புறம் க்ளைமேக்ஸ் சீன்ல,

ஹீரோயினைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெக்க ஹீரோயினோட அண்ணன் கூட்டிட்டுப் போறான். நடுவுல காரை நிறுத்தி தடுத்து பன்ச் பேசணும். ஹீரோ இதான் சீன். இப்போ ஹீரோ வேற ஒருவர் ஓ.. சொல்ல மறந்துட்டேன். இந்த சீன்ல மறுபடியும் சினிமா சூட்டிங். ஹீரோ நம்ம படத்தோட ஹீரோ இல்ல. மொதல்ல சொன்ன, படத்துல வர்ற சினிமாவோட ஹீரோ. நா சரியாத்தான் சொல்றேனா..

ஓக்கே. சூட்டிங் ஹீரோ இருக்காரில்லையா.. அவுருதான் காரை நிறுத்தி பன்ச் பேசணும். அந்த நேரம் பாத்து ரோட்டுல வர்ற தாதா அண்ணனும் இன்னொரு அண்ணா தாதாவும் மிரண்டு போய் நிற்க, ஹீரோ ஒரு வெடிகுண்டை கடித்து வீசி ஹீரோவையும் ஹீரோயினையும் தப்ப வைக்கிறார். அந்த சினிமா ஹீரோ யாருன்றிங்க… மறுபடி பவர் ஸ்டார்தான்.. ஹஹ்..ஹஹ்..ஹஹ்..ஹா…..

 

அப்புறம் மொதல் சீன்லருந்து

தன்னோட நண்பனுக்கு காதல் கல்யாணம் பண்ணி வக்கிறாரு ஹீரோ. அந்த மணப்பொண்ணோட அண்ணன் பெரிய தாதா. அவருக்கு தெரிஞ்சா பிரச்சினையாய்டும்னு யாருக்கும் தெரியாம பெங்களூரு போயிடறாரு ஹீரோ. அங்க வச்சிதான் ஹீரோயின பாக்குறாரு ஹீரோ. ஹீரோயினோட அண்ணனும் ஒரு தாதாவாம். ஆக மொத்தம் ரெண்டு தாதா. ஆனா, அந்த ரெண்டு பொண்ணுங்களோட அண்ணனும் ஒரே தாதாதான். இப்போ அந்த தாதா அண்ணனுக்கே ஒரு தாதா இருக்கான்னு தெரிஞ்சி அந்த தாதாகிட்டயிருந்து இந்த தாதாவ காப்பாத்தி, அதன் மூலமா, தாதா அண்ணனோட மனசுல எடம் புடிச்சி ஹீரோயின கல்யாணம் பண்ணிக்க பெரிய ட்ராமா போடறாரு ஹீரோ.

அதுக்காக விதம் விதமா ட்ரெஸ் போட்டுனு, சலூன்ல ஒட்டிருக்குற போஸ்டர்ல இருக்குற பசங்க மாதிரியே தலைய விதம் விதமா  வாரினு, மூஞ்சியெல்லாம் WXYZ வடிவத்துலயெல்லாம் தாடி வரைஞ்சிட்டு,  ’ஜென்னிஃபர்’ பாட்டுல பிரபுதேவா போடும் FLOOR MOVEMENTS மாதிரிலாம் டேன்ஸ் போட்டு, ஃபைட்டர்ஸையெல்லாம் அடித்து பறக்க விட்டு,   பயங்கர ரிஸ்க் எடுத்திருக்கிற அந்த ஹீரோ யாருன்றிங்க… நம்ம பழைய காமெடியன் சான்ட்டா.தான்…

நீங்களே சிரிச்சுக்கங்க.

விமர்சனம்: அதீதன் திருவாசகம்

.

.

More articles

10 COMMENTS

Latest article