தண்டவாளத்தில் செல்ஃபி: இளைஞருக்கு நேர்ந்த கதியைப் பாருங்க!

Must read

 

டும் ரயில் முன்பு ஸ்டைலாக நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த வாலிபர் மீது ரயில் மோதியது. அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிவா. ஓடும் ரயில் முன் நின்று செல்ஃபி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன், பாரத் நகர் ரயில் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் ரயில் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், தண்டவாளத்தின் அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்தார்.

ரயில், அருகில் வரும்வரை தொடர்ச்சியா வீடியோ எடுத்துள்ளார்.

மிக அருகில் ரயில் வரும்போது விலகிவிடலாம் என எண்ணியிருந்தார். ஆனால் அவர் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ரயில் அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், ரயில்வே காவல்துறையினரால் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர், தற்போது நலமாக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் செல்ஃபி எடுப்பதும், ரயில், அவர்மீது மோதுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

[embedyt] https://www.youtube.com/watch?v=2h_5oBdgj-I[/embedyt]

More articles

Latest article