பரிமலை

ன்று சபரிமலை கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் கை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

திருவோண பண்டிகையை ஒட்டி, சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்புப் பூஜைகள் செய்யப்படவுள்ளன.

ஐந்து நாட்களுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாகத் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிறப்புப் பூஜையில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.