டில்லி

ன்று பிரதமர் மோடி மன் கி பாத் 104ஆம் நிகழ்வில் உரையாற்றுகிறார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, “மனதின் குரல்” (மன் கி பாத்)  என்கிற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.கடந்த 2014ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உரை நிகழ்வு தொடங்கியது.

கடந்த 2023 ஏப்ரல் 30 அன்று அதன் 100வது அத்தியாயம் முடிந்தது. இதுவரை 103 உரைகள் முடிந்துள்ளன. இந்த மன் கி பாத் 103 ஆம் நிகழ்வில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி பிரதமர் மோடி பேசினார். இன்று  104-வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது.

பிரதமர் மோடி இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ” காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். இந்தியா முழுவதிலும் இருந்து எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.