கனமழை எதிரொலி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு  தடை  விதித்தள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சபரிமலைக்கு ரெட் அலர்ட் (Red Alert Sabarimala) விடுக்கப்பட்டுஇருப்பதாலும், சபரிமலை அண்ணப்பனை தரிசிக்க  பக்தர்கள் யாத்திரைக்கு (Sabarimala Pilgrimage) இன்று (நவ. 20) முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஸஅய்யப்பன் கோயில் திருநடை நவம்பர் 15ந்தேதி  மாலை திறக்கப்பட்டது. 41 நாள்கள் நடைபெறும் மண்டல மாவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் 41 நாள்கள் திறந்து இருக்கும். அதன்பின்னர், டிசம்பர் 26ஆம் தேதி கோயில நடை சாத்தப்படும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். . ஆனால்,  கேளராவில் பெய்துவரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

முதலில், வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆற்றில் நீராடுவதற்கு மட்டும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து மழை கொட்டி வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம்,   பம்பை அணை (Pamba Dam), சபரிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் வெளியிட்டுள்ளது.

இதனால், பக்தர்கள் சபரிமலை வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர், கன மழை, பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு குறைந்தபின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article