திருவந்தபுரம்:
கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் மாத பூஜைக்காக ஜூலை 17 முதல் 21ஆம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளது.

இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. 48 மணிநேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், முழுமையான கரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கேரளத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அண்மையில் அனுமதி அளித்ததையொட்டி கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்களும் அண்மையில் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.