விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்பவினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் திரிஷா இணையுடன் சாமி படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து தற்போது  மீண்டும் ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படம் தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த  படத்தில் விக்ரமே மீண்டும் கதாநாயகனாக  நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு தற்போத வெளியாகி உள்ளது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் பாபி சிம்ஹா, பிரபு, நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்க இருக்கிறார்கள்.

இவர்கள் தவிர்த்து ஏற்கனவே சாமி படத்தில் நடித்திருந்த பலரும் இப்படத்தில் தொடர்கின்றனர்.

இசையப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியன் ஒளிப்பதிவை கவனிக்க, கனல் கண்ணன் ஸ்டன்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25ந்தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அல்லது ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்னு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.