நான்காவது முறையாக நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு !

Must read

திலீப் – காவ்யா

ங்கமாலி, கேரளா

டிகையை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் மனு நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக போடப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் ஜுலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  தற்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அவர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் இரு முறையும், அங்கமாலி நீதிமன்றத்தில் ஒரு முறையும் ஏற்கனவே ஜாமீன் மனு அளித்திருந்தார்.  அவை அனைத்தும் தள்ளிபடி செய்யப்பட்டு விட்டது.

மீண்டும் தற்போது அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை திலீப் அளித்தார்.   ஆனால் அவரை ஜாமீனில் விடுவிப்பதால் விசாரணை பாதிப்பு அடையும் என போலிசார் தெரிவித்தனர்.   அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் திலீப் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.  திலீப்புக்கு நீதி மன்றக் காவல் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திலீப்பின் மனைவி நடிகை காவியா மாதவன் இதே வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 

More articles

Latest article