திருவாரூர்:
கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட அரசவனங்காடு பகுதியில் 2.90 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கம் மற்றும் அகலப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசு மேற்கொள்ளவேண்டிய நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்றார்.