சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடலாடி ஊராட்சி தலைவர் பதவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் போட்டியிட்ட, ஹாஜிமா ரம்ஜான் பீவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டிக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், சில பகுதிகளில் போட்டியிட்டு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடலாடி ஒன்றியம் அவதாண்டை  ஊராட்சி தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், கே. நவாஸ் கனி எம்.பி.யின் தாயார் ஹாஜிமா ரம்ஜான் பீவி  போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு  தாய்ச்சபை நிர்வாகிகள்  வாழ்த்து தெரிவித்தனர்.