வதந்தி! ஆத்திரமான காமெடி கிங் கவுண்டமணி !

Must read

வாட்ஸ்அப், பேஸ்புக் என்று நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வளரும்போது, வதந்திகள் குறையும் உண்மைச் செய்திகள் விரைவில் பரவும் என்பதுதானே நடக்க வேண்டும்?
0
ஆனால்  வதந்திகள்தான் இந்த நவீன சாதனங்கள் மூலம் எளிதில் பரவுகின்றன.
அதுவும் பிரபலங்கள் குறித்து எதிர்மறை செய்திகளை ஆவலுடன் பரப்புகின்றனர் நெட்டிசன்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நகைச்சுவை நடிகர் கவுண்டமணிதான்.
இதுவரை ஏழெட்டு முறை, இவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியிருக்கின்றன. அவரும் மறுத்து வந்தார்.
நேற்று மீண்டும் இந்த வதந்தி பரவவே, கவுண்டமணி, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
தனது வழக்கறிஞர் சசிக்குமார் மூலம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், “என்னைப் பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

More articles

Latest article