டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். அவர்களுக்கு கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர் என  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார்.

வெளிநாடுகளில் கொரோனா ஒமிக்ரான் மாறுபாறு அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது.  கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதுடன், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வெளி நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணிகளுக்கு இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், தற்போது  ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உள்ளது. ஆறு மாதங்களாக கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு இன்றுமுதல் பரிசோதனை செய்யப்படும். கொரானா பரவலை தடுக்க தமிழக அரசு பணிகளை வேகப்படுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சு. தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்றுமுதல் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிய வகை கொரோனா பிஃஎப் 7 பரவலை தடுக்க ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.வெளிநாட்டு பயணிகளிடம் மாதிரி சேகரித்த பின்பே வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்றும், அவர்களுக்கு கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர் என  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார்.