பாட்னா:

‘ஆர்.எஸ்.எஸ்., பாஜக என்னைத் துன்புறுத்துகிறது, அச்சுறுத்துகிறது என்று நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த  ராகுல்காந்தி தெரிவித்துஉள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல்காந்தி, தனது மனதில் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் என்று பேசினார்.

ராகுலின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தடுன் பீகாரில்  மோடி என்ற சமூகத்தனர் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களை  புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து  மகாராஷ்டிரா  தேர்தல் பிரச்சாரத்திங்னபோது,  ஈடுபட்ட பிரதமர் மோடியும், ‘‘என்னை அவமானப்படுத்தும் நோக்கில், திருடன் என்று கூறும் வகையில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார்’ என்று பேசி இருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சைகளை உருவாக்கி விவாதப்பொருளாக மாறி யநிலையில், பீகார் துணை முதல்வர்  சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்,   ராகுல் காந்தி மீது ஐபிசி 500 பிரிவின் (தண்டனைக்குரிய அவதூறு) கீழ் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, என்னை துன்புறுத்தும் நோக்கிலும், அச்சுறுத்தும் நோக்கிலும், பாஜக-ஆர்எஸ்எஸ்ஸில்  உள்ள தனது  “அரசியல் எதிரிகள்”  தொடர்ந்துள்ள வழக்க காரணமாக தான் இன்று  பாட்னாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும்,  “நான் இன்று மதியம் 2 மணிக்கு பாட்னாவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவேன், ஆர்எஸ்எஸ் / பாஜகவில் எனது அரசியல் எதிரிகள்  என் மீது தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், மஸ்கான்-சேவ்ரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தன்னை குற்றவாளி அல்ல என்று தெரிவித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.