புதுச்சேரி திட்டக்குழு கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் இன்று திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களை அழைத்த கிரண் பேடி, அதிமுக உட்பட வேறு எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்டு, பின்னர் திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று நாராயணாசாமி கோரிக்கை வைத்த நிலையில், அவற்றை ஏற்க கிரண்பேடி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதன் காரணமாக திட்டக்குழு கூட்டத்தில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்த முதல்வர் நாராயணசாமி, அனைத்து கட்சிகளையும் அழைத்துவிட்டு, மீண்டும் திட்டக்குழு கூட்டத்தை நடத்தினால், தாம் பங்கேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.