சண்டிகர்:

கில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ‘சக்தி வாய்ந்த’ இளைஞர் ஒருவரை,  தலைவராக தேர்ந்தெடுங் கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில்,  பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல்காந்தி, காரணமாக மூத்த தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டினார். அப்போது, தனது முயற்சிக்கு மூத்த தலைவர்கள் ஆதரவளிக்க வில்லை என்று குற்றம் சாட்டி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.

ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்துவிட்ட நிலையில்,  ராகுலின் சகோதரி, பிரியங்கா உள்பட  பல தலைவர்கள் ராகுலை சமாதானப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுத்து, கடந்த 3ந்தேதி தனது ராஜினா மாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது காங்கிரஸ் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான கேப்டன் அம்ரீந்தர் சிங், ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தமுடிவி துரதிர்ஷ்டவசமானது என்று தெரி வித்து உள்ளார். மேலும், காங்கிரஸ்  கட்சியை ஊக்குவிப்பதற்காக மற்றொரு ஆற்றல் மிக்க இளைஞர் தலைவரை  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்வு செய்யும் என்று நம்புவதாகவும், , . இளம் இந்தியாவின் தேவையை கவனத்தில் கொண்டு, காரியக்கமிட்டி, ஒரு இளம் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.  அப்போதுதான், இளைஞரிகளின் அபிலாசை மற்றும் கட்சியின் அடிமண்ட தொண்டரோடு இணைந்து செயலாற்ற முடியும் என்று தெரிவித்து உள்ளார்.