டில்லி:

ட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை ரூ.3 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு நடுத்த மக்களை பாதிக்காது என்று மத்திய போக்குவரத்துதுறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் டீசல் மீதான வரி ஒரு சதவிகிதம் சுங்கவரி ஏற்றப்பட்டது.  அதேவேளையில், மின்சார வாகனங்கள் மீது பெரும் வரிச்சலுகைகளை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  நள்ளிரவு முதலே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதாவது, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை விலைகள் குறைந்துவிட்டன,  இருந்தாலும் தற்போது கூட்டப்பட்டுள்ள கலால் வரி மற்றும் சாலை செஸ் அதிகரிப்பு தற்போதைய விகிதங்களை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் என்றும், கஇது (குறைந்த) சர்வதேச விலைகளால் ஏற்படும் பாதிப்புகளை  ஈடுசெய்யப்படும், மேலும் இந்த பணம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கங்களுக்கு  பெரிய அளவில் பங்களிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த வரி உயர்வு காரணமாக நாட்டிற்கு நிறைய வருவாய் கிடைக்கும் என்றும்,  இது நன்மையே அன்றி எந்தவொரு  எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. இது முந்தைய பட்ஜெட்டில் சுமார் 78,000 கோடியாக இருந்தது, தற்போது, ரூ .83,000 கோடிக்கு மேல் சென்றுள்ளது.

ஏற்கனவே பிஎஸ்-4 விதிமுறைகளின்படி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது,  கூட ஆட்டோமொபைல் தொழில் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால், அதுமிகவும் வெற்றிகரமாக மாறியது. அதுபோல, தற்போது மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த விஷயத்தில் அரசு செலுத்தும் வேகம் 100% இயல்பானது  இது ஒரு படிப்படியான செயல்முறை மற்றும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன். மின்சார பேருந்துகள் மற்றும் லாரிகள் சாலையில் ஓடுவதால் மின்சார நெடுஞ்சாலைகளை உருவாக்க விரும்புகிறோம்.

போக்குவரத்து அமைச்சராக, நான் செலவு குறைந்த, மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். எங்கள் இறக்குமதி மசோதா மற்றும் மாசுபாட்டைக் குறைக்க, ஜி.எஸ்.டி மின்சார வாகனங்களுக்கு முச்சக்கர வண்டிகள், நான்கு சக்கர வாகனங்கள் அல்லது இரு சக்கர வாகனங்கள் என 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.