தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக-வினர் பலரும் ஊழல் செய்ததாக கூறிய அண்ணாமலை அது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த 14 ம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து பதிலளித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய அனைத்தும் ஆதாரமற்ற குற்றாச்சாட்டு என்றும் இதுதொடர்பாக அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.-யும் வழக்கறிஞருமான வில்சன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர். எஸ். பாரதி பொய் குற்றாச்சாட்டு கூறியதற்காக 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க நேரிடும் என்று கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாகவும், ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் 84 கோடி ரூபாய் வாங்கியதாக தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 501 கோடி ரூபாய் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.