தஞ்சை:
லக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.