திகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில் காலை 6 மணி முதல் மாலை 8.30 மணி வரை செயல்படுகிறது. இடையில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் இடைவேளை. வேண்டுதல் தோல்வியாதி, வாதம் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.


நவராத்திரி விழா, இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். முதல் 9 நாட்கள் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனுக்கு 11ம் நாளில் சந்தனக்காப்பு இடப்படுகிறது. தல சிறப்பு ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இது அர்த்தநாரீஸ்வர லிங்கம் என அழைக்கப்படுகிறது. நடை திறப்பு இந்த கோவில் காலை 6 மணி முதல் மாலை 8.30 மணி வரை செயல்படுகிறது. இடையில் மதியம் 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் இடைவேளை. வேண்டுதல் தடை பட்ட திருமணங்கள் நடக்கவும், தம்பதியர் ஒற்றுமையாக வாழவும் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.

ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் நவராத்திரி விழாக்களின் போது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த கோவில் காஞ்சிபுரத்தின் பத்து அழகிய அம்மன் கோவில்களில் ஒன்றாகும். தல சிறப்பு கோவிலில் இருக்கும் அம்மன் பொதுவாக ஒரு கையில் சின் முத்திரை காட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோவிலின் சிறப்பு என்ன வென்றால் இந்த அம்மன் தனது இரு கைகளிலும் சின் முத்திரை காட்டி அமர்ந்துள்ளார். நடை திறப்பு இந்த கோவில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படுகிறது. இடையில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் இடைவேளை. வேண்டுதல் கடன் தொல்லை நீங்கவும், செல்வம் பெருகவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும், திருமணத் தடை நீங்கவும் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.