சென்னை

ழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில் சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது..   இங்கு துணை போக்குவரத்து ஆஅணையராக் நடராஜன் என்பவர் பதவியில் உள்ளார்.  நடராஜன் தனது அலுவலகத்தில் பணி புரியும் 30 உதவியாளர்களைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு அளிக்க லஞ்சம் பெற்றதாகத் தகவல் வந்தன.

நடராஜன் ஒவ்வொரு உதவியாளரிடம் இருந்தும் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்று வருவதாக் கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீர் என எழிலகத்தில் சோதனை நடத்தினர்.   அப்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் மொபைல் போன்களும் கைப்பற்றப்படன.

இந்த சோதனையில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.,35 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.   இவை கட்டுக் கட்டாக பல்வேறு இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.  இந்த ரூ.35 லட்சம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.