சென்னை: தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.  பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு அனுமதி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை  இன்று பகல் 12 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதுபோது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.