நெட்டிசன்:
ஆர்.ஷாஜஹான் (  Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு:
2000 ரூபாய் நோட்டுல “இரண்டாயிரம்” என்ற சொல் இந்தியில் தவறாக உள்ளது — அப்படீன்னு ஒரு செய்தி சுத்திட்டிருக்கு. இதைத்தூக்கிட்டு இன்பாக்சுக்கு வராதீங்க. நீங்களும் பரப்பாதீங்க. முன்பக்கம் காந்தி தலைக்கு மேலேயும், பின்பக்கம் இடது கோடியில் வருடத்துக்குக் கீழேயும் இந்தியில் கொட்டை எழுத்துகளில் சரியா இருக்கு.
00
சின்ன எழுத்தில் இருப்பது இந்தி அல்ல. தேவநாகரி எழுத்தில் இருப்பதெல்லாம் இந்தி ஆகாது. 2 என்பதற்கு இந்தியில் தோ, மராத்தியில் தோன். குற்றம் கண்டுபிடித்துப் பேர்வாங்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இதை விட்டுடலாம்.
(ஆயிரத்துக்கு இந்தியில் हजार. இதில் ज – ஜவுக்குக் கீழே புள்ளி தேவையில்லைன்னு இந்தி வல்லுநர்கள் முடிவு செஞ்சு – இந்தி இயக்ககமும் அதைக் கைவிட்டு பலகாலம் ஆயிடுச்சு. ஆனா இப்பவும் புள்ளி வச்சிருக்காங்க – हज़ार. நான் அதைப் பாக்கலே. நீங்களும் பாக்க வேண்டாம்.)
அப்புறம், 500 / 1000 நோட்டுகளை வேர்க்கடலைப் பொட்டலம் கட்டுற மாதிரி படத்தைப் பார்க்கும்போது சிரிப்பு வரத்தான் செய்யுது. ஆனா அந்த மாதிரி படங்களைப் பகிர வேண்டாம். அது நம்ம நோட்டை அவமானப்படுத்தற மாதிரி.  ஒரேயடியா புனிதப்படுத்தவும் வேண்டாம், அவமானப்படுத்தவும் வேண்டாம்.