சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்  முதியோருக்கு ரூ.2000, அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று டிடிவி அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு உள்ளார்.

சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமமுகவின் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்

முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கிராமப்புறத்தில் சிறுவணிகக் கடன் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்

ஊராட்சி ஒன்றியம்தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை

கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்

மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல வேலை இல்லாத இளைஞர்களைக் கொண்டு கிராமப்புறங் களில் இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க உரிய சட்டத்திருத்தம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம்

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூடப்பட்ட சிறு, குறு, தொழில்நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

சீன பட்டாசுகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை

கனிமவளங்களை அரசே முன்னின்று எடுத்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், எரிவாயு, ஸ்டெர்லைட் ஆலையம் திட்டங்கள், இயற்கையை அழித்து சாலை அமைப்பது உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் தமிழகத்தில் அமைக்க விட மாட்டோம்.

விவசாய கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுப்போம்.

விவசாயத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க விட மாட்டோம்.

மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க உரிய திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்

மரபணு மாற்றப் பயிர்கள் தமிழகத்தில் நுழைவது தடுத்து நிறுத்தப்படும்

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்

நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகளை இணைக்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் உள்ளேயும் ஆறுகள் இணைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள நிரந்தர அமைப்பு ஏற்படுத்தப்படும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் பாடுபடுவோம். அப்படி மாற்றப்படுவதால் மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.

மாணவர்கள் நலனுக்காக சென்னையை மையமாகக் கொண்டு ஆணையம் அமைக்கப்படும்,

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துக் கல்லூரிகள், பாலிடெக்னிக்களில் இலவச வைஃபை, கையடக்க கணிணி கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

தற்போதைய ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு வாங்க மாதம்தோறும் 100 ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளில் 80 சதவிகித இடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதுடன், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.