புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1,65,302 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; ஜிஎஸ்டி வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி, நடப்பு 2019-20ம் நிதியாண்டில், முதற்கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ரூ.15 ஆயிரத்து 340 கோடி அளவில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ.12,305 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரிக்கு ரூ.1057 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.