சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும், பருப்பு ஓப்பன் டெண்டர் மூலம் ஸ்டாலின் தலைமையலான தமிழகஅரசு ரூ.100 கோடி ரூபாய் சேமித்து உள்ளது என்று  அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பருப்பு கொள்முதல் அதிக விலைக்கு வாங்கியதில் ரூ.1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றும் ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்ய கொள்முதல் செய்தது. அப்போது பருப்பு கிலோ விலை ரூ.143க்கு கொள்முதல் செய்தது. இதன்மூலம் ரூ.1500 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றது என அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியது. இந்த ஊழலுக்கு அப்போதைய அதிமுக அமைச்சர் காமராஜ், துறை அதிகாரியான சுதாதேவி ஐஏஎஸ்,  ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர்  உடந்தை என சுட்டிக்காட்டியது. இதை ரத்து செய்யக்கோரி அறப்போரி இயக்கம்  2020 மார்ச் 15ந்தேதி போராட்டமும் நடத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது,  திமுக அரசு, பருப்பு கொள்முதல் குறித்த டெண்டரை வெளியிட்டு உள்ளது. அதில் பருப்பு கொள்முதல் விலை கிலோ ரூ.100க்கு குறைவாகவும், 20ஆயிரம் டன் தேவை என்றும் இ-டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டர் ஏலம் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் அறிவித்து.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அறப்போர் இயக்கதைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ்,  இது நல்ல செய்தி. கடந்த ஆண்டு நடைபெற்ற பருப்பு டெண்டர் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் தங்களால் அம்பலப்படுத்தப்பட்டது என்றும், தமிழகஅரசின் பருப்பு ஒப்பந்ததாரர் பருப்பு கிலோ ரூ.143 விலைக்கு வழங்கினார். தற்போது அது ரத்து செய்யப்பட்டு, கிலோ 100க்கு குறைவான விலையில் வாங்க தமிழகஅரசு டெண்டர் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், தமிழகத்துக்கு ரூ.100 கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அதிமுக ஆட்சியில் பருப்பு கொள்முதல் குறித்து அறப்போர் இயக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ள தகவல்…

அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தை காக்கவும் தொடர்ந்து வேலை செய்து வருவது தாங்கள் அறிந்ததே. கடந்த மாதம் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்(TNCSC) ரேஷன் கடைகள் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ 1480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் CBI யில் புகார் கொடுத்துள்ளோம். தாங்கள் இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சிக்கும் உணவு துறைக்கும் அழுத்தம் தரும் படி வேண்டுகிறோம்.

இதற்கு உணவு துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் பொது ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம்.

  • கடந்த 5 ஆண்டுகளில் கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வண்ணமும் இத்தனை வருடங்கள் TNCSCற்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாத வண்ணமும், டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகள், சர்க்கரையில் 2019 லும் பாமாயிலில் 2017 லும் பருப்பில் 2015 லும் மாற்றப்பட்டன
  • கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறச்செய்து, அதுவரை சப்ளை செய்த நிறுவனங்கள் பங்குபெற முடியாத வகையில் நிதி தகுதி(turnover), அனுபவம் போன்றவை மாற்றப்பட்டு, டெண்டர் சட்டத்தின் முக்கிய இலக்கான ஆரோக்கியமான போட்டி இல்லாமல் செய்யப்பட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டர் கிரிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகமாகவே இதில் பங்கெடுத்தனர். அவர்கள் இப்பொருட்களை மீண்டும் கிரிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சப்ளை செய்ய கொடுத்தனர்.
  • மிக முக்கியமாக, கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுக்கும் முன் வரை மற்ற நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட சந்தை மதிப்பிற்கு பொருட்கள் வாங்கப்பட்டது. ஆனால் கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்து டெண்டர்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சந்தை மதிப்பை விட மிகவும் அதிக விலை கொடுத்து சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு வாங்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் நமது வரிப்பண இழப்பும், இதனால் கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக பெரும் லாபத்தையும் ஈட்டினர்
  • கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த பொருட்கள் சப்ளை செய்யும் வேலையை ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு கொடுத்து விட்டனர். Godown வரை அவர்கள் தான் போய் இறக்குகிறார்கள். கிரிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்து, கிலோவிற்கு ரூ 10 முதல் 30 வரை ஊழல் செய்துள்ளார்கள்.

Screenshot_20200309-225220_Docs.jpg

மொத்தமாக கணக்கிடுகையில், சர்க்கரை டெண்டர்களில் மட்டும், கடந்த ஒரு வருடத்தில் தமிழக அரசு வாங்கிய 17.5 கோடி கிலோ சர்க்கரையில் மட்டும் அரசாங்கத்திற்கு ரூ.111 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பாமாயில் டெண்டர்களில் கடந்த 3 ஆண்டுகளில் வாங்கிய 35 கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பின் மதிப்பு ரூ.499 கோடி.

மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 5 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 5 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு ரூ.870 கோடி.

மொத்தமாக நடந்த ஊழலின் மதிப்பு ரூ ரூ.1480 கோடி

Screenshot_20200309-225701_Docs.jpg

கோரிக்கைகள்: உடனடியாக CBI FIR பதிவு செய்து துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் பொது ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சர் காமராசை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். இயக்குநர் சுதா தேவி IAS மற்றும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மத்திய அரசும் சம்பந்தப்பட்ட MMTC, STC, கேந்திரிய பண்டர் அரசு பொது ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்டி குழும நிறுவனங்கள் டெண்டர்களில் பங்குபெற தடை விதிக்க வேண்டும் அரசு இழந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும் டெண்டர் விதிமுறைகளை பழைய படி மாற்றி பல ஒப்பந்ததாரர்கள் பங்கெடுக்கும் படி மாற்ற வேண்டும்

கோரிக்கைகள்

  • உடனடியாக CBI FIR பதிவு செய்து துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் பொது ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சர் காமராசை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். இயக்குநர் சுதா தேவி IAS மற்றும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • மத்திய அரசும் சம்பந்தப்பட்ட MMTC, STC, கேந்திரிய பண்டர் அரசு பொது ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கிறிஸ்டி குழும நிறுவனங்கள் டெண்டர்களில் பங்குபெற தடை விதிக்க வேண்டும் அரசு இழந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும்
  • டெண்டர் விதிமுறைகளை பழைய படி மாற்றி பல ஒப்பந்ததாரர்கள் பங்கெடுக்கும் படி மாற்ற வேண்டும்

நாம் இந்த ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெறப்பட்ட அரசு ஆவணங்களை வைத்தும் சந்தை மதிப்பை தெளிவாக கணக்கெடுத்தும் வெளியிட்டுளோம்

நன்றி: அறப்போர் இயக்கம்.