கேதார்நாத்

கேதார்நாத்தில் உள்ள கோவில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்குப் பதில் பித்தளை முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.   இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் ஆகும்.  கோவிலுக்குப் பக்தர்கள் கொடுத்த காணிக்கையின் மூலம் கோவில் கருவறை சுவர்களுக்குத் தங்க முலாம் பூசிய  தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்கு பதில் பித்தளை முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இந்த முலாம் விவகாரத்தில் ரூ.125 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது

கருவறை பணிகளுக்காக 23777.800 கிராம் தங்கமும் 1001.30 கிராம் தாமிரமும் பயன் படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.125 கோடி செலவழிக்கப்பட்டது.  சமீபத்தில் இவை பித்தளையாக இருப்பதாகக் கோயிலின் சர்தாம் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் திரிவேதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இவ்வீடியோவில் தங்க முலாமிற்குப் பதிலாகப் பித்தளை பயன்படுத்தப்பட்டு இருந்ததாகச் சொல்லப்பட்டது.  எனவே இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரகாண்ட் மாநில சுற்றுலா மதம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ்

‘கேதார்நாத்‘கோயிலில் தங்கமுலாம் பூசுவதற்கு அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது. ஆயினும் தற்போது கே   தார்நாத் கோயிலில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.   இந்த மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்கு கர்வால் ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழுவை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.